Sunday, December 10, 2023

காரணி


கனவினை 

வரைந்து கொண்டிருந்தேன் ..

ஒரு மரம் ,

மிக நெருங்கிய 

புத்தகத்தோடு நான் ,

குவளைத்தேநீர் ,

தூரத்தில் ஓரருவி ,

மற்றெல்லாம் வெறும் 

வெள்ளை நிற வெறுமை ..

மறந்து 

கூடவே எடுத்துவந்துத் 

தொலைத்திருக்கிறேன் ..

வாட்ஸ் ஆப் பீப் !


     - நா. அருண்வாசகன்


 

மாமிச உடம்பை

கூறு கூறாய் உண்ணும் 

அகோரி 

பசியெனும் கொடும்பிணி !


        - நா. அருண்வாசகன்

ஒரு பறவையின்  

சிறகினை 

தன் சிரிப்புடன் பரிமாறிக் கொண்ட தேவதைக்கு 

வனமெங்கும் 

தன்  மகரந்தச் சிலிர்ப்பினை 

உதிர்த்துச் சென்றது 

அவ்வெண்பறவை  ! 

           - நா. அருண்வாசகன்