Friday, July 16, 2010

கொஞ்சமும் சிந்தாமல்

நீர்மக்குடம் கிழித்து
கருவறை தாண்டிய பயணத்தில்
பிணி கொல்லும் வாழ்வின்
எதிர்மறை தளவாடம் ...

நிஜம் கொல்லும் சாவில்
நிழல் பூசும் அரிதாரம்
வரமும் சாபமுமென
தராசு முள்ளிடும் தனிமை...

புரிதல் மொழியில்
பாசத்தின் அடையாளம்
அறிவு கூர் தீட்டவொரு
ரௌத்திரக் கவிதை ...

அர்த்தமற்று எத்தனித்தும்
வாசிக்க தவறவில்லை
கொஞ்சமும் சிந்தாமல்
"அம்மா " என முதல் மொழியை !!!

Saturday, July 10, 2010

பசலை

வார்த்தைகள் தொலைகப்பட்டு ...

பிரபஞ்ச துகள் கூரிடும்மௌனப் பரிபாஷை ...

பகிர்தல் நினைவூட்டும்

இந்த பசலை போதுமடி

அந்த நினைவு துளி மீட்க .... !!

பகிர்தலும் பகிர்தல் நிமித்தமும்

உயிறீறாரும் , மெய் ஈரோன்பதும் ...
உயிருடன் மெய் புணரும்
இரு சதம் சொச்சமும் ...
வளை மணி குண்டலமொத்த
பிரிதிரண்டும் ...
உயர்திணை காதலும்...
பெருந்திணை காமமும் ..
எழு சீர் குறளும்
எழுத்தின் இடை குறையும் ..
எண்ணத் தோன்றலில்
மௌனக் குறுக்கமாய் ..
இல்பொருள் உவமைஎன
மாயை பழிக்குதடி
உறு பசலை பெருக்கலில்
ஒரு நொடி தீண்டலென
உனக்கும் எனக்குமாய்
இந்த பகிர்தலும் பகிர்தல் நிமித்தமும் !