Friday, December 24, 2010

காதல் கருவுறுதல் பற்றிய ஒத்திகை 

எதார்த்தம் தாண்டிய வெளியின் முதல் கோடு....
முற்றுப் புள்ளி வைத்துத் தொடரப்படும் வரிகளின் ஜனனப் பிரதி...
துளிர்த்தலும் ...பிரிதலும் ...மிகுத்தலும்..
சிந்தனைச் சில்லுகளில் காப்பியபடும் இளவேனில் கீற்றுப் பின்னல்கள்..
அலைப்பேசிச் சிறைக்குள் தாழிட்டுக் கொள்ள
ஆயத்தப்படும் முன்னேற்பாடு..
கார் காலமொன்றின் நடுநிசியில் ...
தாய்ச் சிறகில் சேய் அடங்கும் வெப்பக் குளிரிலும்...
ஒரு குவளை தேநீர் உரையாடலின் கடைசித் துளியிலும்...
அடுத்த சந்திப்பிற்கான காத்திருப்பினை ...
அச்சாரப்படுதும் ஓரப் புன்னகையிலும் ...
பிரசுரிக்கப் படுகிறது ....
காதல் கருவுறுதல் பற்றிய ஒத்திகை ...!!!

No comments:

Post a Comment